தெலுங்கானாவில் 2-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை...!

தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது.

Update: 2022-10-28 03:20 GMT

புதுடெல்லி,

2024-ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி மக்களைச் சந்திக்கிறார்.

கடந்த செப்டம்பர் மாதம் 7-ந் தேதி அவர் இந்த யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார்.

தொடர்ந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் யாத்திரை நடத்திவிட்டு அவர் கர்நாடக மாநிலத்தின் ரெய்ச்சூரில் இருந்து தெலுங்கானாவில் நுழைந்தார். மேலும், தீபாவளி பண்டிகையொட்டி பாரத் ஜோடோ பாதயாத்திரை 3 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் நாராயண்பேட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் தொடங்கியது.

ராகுல் காந்தி மொத்தம் 16 நாட்கள் தெலுங்கானா மாநிலத்தில் பாதயாத்திரையை தொடர்கிறார். அப்போது அவர் 19 சட்டசபை தொகுதிகளுக்கும், 7 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கிறார். அவர் நடக்க திட்டமிட்டிருக்கும் தூரம் 375 கி.மீ.

இந்த மாநிலத்தில் ராகுல் மேற்கொண்டுள்ள யாத்திரையை ஒருங்கிணைப்பதற்காக 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 4-ந் தேதி ஒரு நாள் ஓய்வு எடுக்கவும் ராகுல் காந்தி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தெலுங்கானா மாநிலத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரையை முடித்துக்கொண்டு அடுத்த கட்டமாக மராட்டிய மாநிலத்துக்கு செல்ல உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்