ஒலிபெருக்கி:-காங்கிரஸ் கட்சி இலவச திட்டங்களை வழங்க கூடாது

Update: 2023-04-25 21:35 GMT

கர்நாடக சட்டபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி இலவசங்களை அறிவித்து வருகிறது. இது மக்களை ஏழையாக வைக்கும் திட்டம். மக்களை சுயமாக உழைக்க வைக்க வேண்டும். பசி என்று வருகிறவர்களுக்கு மீன் பிடித்து கொடுத்தால் ஒரு நாள் சாப்பிடுவான். அதே வேளையில் அவர்களுக்கு மீன்பிடிக்க கற்றுக்ெகாடுத்தால் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவார்கள். அதுபோல் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர வழிவகை செய்ய வேண்டும். இலவச திட்டங்களை செயல்படுத்த கூடாது.

-நடிகை சுமலதா, மண்டியா தொகுதி எம்.பி.

என்னை குறைகூறுவது என்பது மக்களை அவமதிக்கும் செயல்

தோல்வியின் விரக்தியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட காங்கிரசார் என் மீது ஊழல் முதல்-மந்திரி என குற்றம்சாட்டுகிறார்கள். மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 100 சதவீதம் தோல்வி அடைவது உறுதி. இதை அறிந்து தான் அவர்கள் என் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடங்கியுள்ளனர். என்னை குற்றம்சாட்டுவது என்பது மாநில மக்களை அவமதிக்கும் செயல்.

- பசவராஜ்பொம்மை, முதல்-மந்திரி.

முதல்-மந்திரி பதவியை ஒரு சமூகத்திற்குள் கட்டுப்படுத்தாதீர்

முதல்-மந்திரி பதவி என்பது ஒரு சமுகத்திற்கானது அல்ல. அது ஒரு மாநிலத்தின் பெருமை மிகு பதவி. அதை ஒரு சமுதாயத்திற்குள் மட்டுப்படுத்த வேண்டாம். அரசியல் கட்சிகள் சூழ்நிலைக்கு ஏற்ப முதல்-மந்திரியை தேர்வு செய்கின்றன. நாட்டின் நலன் கருதி முதல்-மந்திரிகள் செயல்பட வேண்டும். சாமுண்டீஸ்வரி தொகுதியில் எச்.டி.தேவேகவுடா, ஜி.டி.தேவேகவுடா ஆகியோருக்காக மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள். ஜி.டி.தேவேகவுடா 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

-எச்.டி.குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி.

பா.ஜனதாவுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் தேவையில்லை

சாக்கடை, குடிநீர், சாலை வசதிக்காக முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள். கல்வி, சுகாதாரம் திட்டங்களை பெற்ற முஸ்லிம்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்கிறார்கள். லிங்காயத்-வீரசைவ சமுதாயத்தை உடைக்க நினைத்தவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். பா.ஜனதாவை இந்து கட்சி என்று கூறுகிறார்கள். அது பெருமை தான். பா.ஜனதா இல்லையெனில் இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும். - கே.எஸ்.ஈசுவரப்பா, பா.ஜனதா மூத்த தலைவர்.

முனியப்பா, பரமேஸ்வரை தோற்கடித்தவர்கள், காங்கிரசார்

கோலார் நாடாளுமன்ற தேர்தலில் கே.எச்.முனியப்பாவை தோற்கடித்தவர்களும், 2013 சட்டசபை தேர்தலில் ஜி.பரமேஸ்வரை தோற்கடித்தவர்களும் காங்கிரஸ்காரர்கள் தான். புலிகேசி நகர் தொகுதியில் அகண்ட சீனிவாசமூர்த்தியின் வீட்டை தீவைத்து எரித்து அவரை நிர்க்கதியாக்கிவர்களும் காங்கிரசார் தான். அவருக்கு சீட் கொடுக்காமல் புறக்கணித்துள்ளனர். ஆனால் தலித்துகள் மற்றும் சிறுபான்மையின மக்கள் மீது பாசம் இருப்பது போல் காங்கிரசார் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். -கோவிந்த் கார்ஜோள், நீர்ப்பாசனத் துறை மந்திரி.

Tags:    

மேலும் செய்திகள்