கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னிலை: சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு
காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில் சிம்லாவில் உள்ள அனுமான் கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார்.
சிம்லா,
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி 118 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 74 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை அக்கட்சியின் தொண்டர்கள் தற்போதே கொண்டாடி வருகின்றனர்.
பெங்களூரு, டெல்லி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் நிலையில் சிம்லாவில் உள்ள அனுமான் கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார்.