காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த 2 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
புதுடெல்லி,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் கொரோனா தொடர்பான உடல் நல பாதிப்புகளால் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், சோனியா காந்தியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த 2 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த சோனியா காந்தி வீட்டுத்தனிமையில் இருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.