விலைவாசி உயர்வை எதிர்த்து சட்டசபை தொகுதிதோறும் கூட்டங்கள்: காங்கிரஸ் நடத்துகிறது

விலைவாசி உயர்வை எதிர்த்து சட்டசபை தொகுதிதோறும் கூட்டங்களை காங்கிரஸ் கட்சி நடத்த உள்ளது.

Update: 2022-08-11 20:26 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

விலைவாசி உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் 17-ந் தேதி முதல் 23-ந் தேதிவரை உரையாடல் கூட்டங்களை நடத்த உள்ளோம். மொத்த விலை சந்தைகள், சில்லரை மார்க்கெட்டுகள் உள்ளிட்ட இடங்களில் இந்த கூட்டம் நடத்தப்படும்.

இறுதியாக, 28-ந் தேதி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும். அதில், கட்சியின் மூத்த தலைவர்கள் பேசுவார்கள்.

கடந்த 5-ந் தேதி காங்கிரஸ் நடத்திய போராட்டம் மக்களிடையே ஆதரவை பெற்றது. அதை 'கருப்பு மேஜிக்' என்று பிரதமர் மோடி சொல்வதன் மூலம் அவரது அரசின் அச்சத்தை உணர்ந்து கொள்ளலாம்.

தொடர்ந்து போராட்டம் நடத்தி, மோடி அரசு தனது கொள்கைகளை மாற்ற செய்வோம் என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்