தலித் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை ரத்து செய்தது குற்றம்; காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விமர்சனம்

தலித் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையை ரத்து செய்தது குற்றம் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2022-11-29 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

போலீசில் சிக்காத ரவுடிகள் பா.ஜனதா தலைவர்களுடன் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வருகிறார்கள். அது அவமானம். கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் தலித், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

இதனால் அந்த சமூகங்களின் குழந்தைகளின் கனவுகள் நொறுங்கி போகும். மேலும் அந்த சமூகங்களுக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை குறைப்பது பெரிய குற்றம். இது அந்த மக்கள் மீது அத்துமீறி நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்