ரூ.80 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை

மால்தாரே அருகே ரூ.80 லட்சம் செலவில் கான்கிரீட் சாலையை கே.ஜி.போப்பையா எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

Update: 2022-11-21 18:45 GMT

குடகு:-

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா மால்தாரே தொட்டஹட்லு ஹாடகி செல்லும் பகுதியில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை முன்னாள் சபாநாயகரும், விராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஜி.போப்பையா பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது பேசிய கே.ஜி.போப்பையா கூறும்போது:-

கர்நாடக அரசு மக்களுக்காக பல திட்டங்களை வழங்கி வருகிறது. இத்துடன் காவிரி வளர்ச்சித்திட்ட கழகமும் இணைந்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு மானிய தொகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது ரூ.80 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள பட்டியல் இன மக்கள் மற்றும் பழங்குடியினர், இதர சமூக மக்கள் பயன்பெறும் வகையில் காவிரி வளர்ச்சி திட்ட கழகம் சார்பில் விராஜ்பேட்டை தாலுகாவில் சுமார் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த நிதியை வைத்து கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும். தொடர்ந்து மக்கள் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் சிலர் இந்த பணிகளை பார்க்காமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். ஆனால் நாங்கள் இதை கண்டு கொள்ளப்போவது இல்லை. மக்களுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள்தான் நம்நோக்கம். இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்