கத்தியால் மனைவி குத்தியதாக பிரதமர் அலுவலகத்தில் புகார் செய்த பெங்களூரு நபர்
கத்தியால் மனைவி குத்தியதாக பிரதமர் அலுவலகத்தில் பெங்களூரு நபர் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் வசித்து வரும் யதுநந்தன் ஆச்சார்யா என்ற நபர் டுவிட்டர் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு தனது மனைவி மீது புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் எனது மனைவி என்னை கத்தியால் தாக்கினார். எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. ஏன் என்றால் நான் ஒரு ஆண். என் மனைவிக்கு எதிராக வன்முறை வழக்கு பதிவு செய்யப்படுமா?. என்று கேட்டு உள்ளார். இந்த புகாரை அவர் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜூஜூ, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஆகியோருக்கும் டேக் செய்து உள்ளார். அந்த டுவிட்டர் புகாருக்கு பதில் அளித்து உள்ள பிரதாப் ரெட்டி சம்பவம் குறித்து நேரில் வந்து புகார் அளிக்கும்படி கூறியுள்ளார்.