சாலையோர வியாபாரிகளால் நடைபாதை ஆக்கிரமிப்பு
பெங்களூரு நகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் பாதசாரிகளின் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நகரில் பெரும்பாலான நடைபாதைகள் சேதமடைந்தும், ஆக்கிரமிக்கப்பட்டும் காணப்படுகிறது. இதேபோன்ற ஒரு நிலை தான் உத்தம்சாகர் பகுதியில் நிலவுகிறது. அந்தப்பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் முன்பு உள்ள நடைபாதையை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடக்கும் அவலம் உள்ளது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
- சாகர், உத்தம்சாகர், பெங்களூரு.
நடைபாதையில் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்
பெங்களூரு மத்திகெரே பகுதியில் சாலை அமைத்தல், கட்டிடம் கட்டுதல் போன்ற கட்டுமான பணிகள் நடந்தது. இதனால் கட்டிட கழிவுகள் அங்குள்ள நடைபாதையில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகும், கட்டிட கழிவுகளை அங்கிருந்து அகற்றவில்லை. இதனால், பாதசாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள், நடைபாதையில் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரவீன், மத்திகெரே, பெங்களூரு.