தெலுங்கு நடிகர் கிருஷ்ணா மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக காலமானார்.
புதுடெல்லி,
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக காலமானார் நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நடிகர் கிருஷ்ணாவின் மறைவு சினிமா மற்றும் பொழுதுபோக்கு உலகிற்கு மாபெரும் இழப்பாகும். கிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்லை தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மா சாந்தியடையட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.