கேரளாவில் கல்லூரி தேர்தலில் வன்முறை; 4 மாணவர்களுக்கு காயம் - 2 பேர் கைது

சில நாட்களுக்குப் பின் வாக்குப்பதிவு மீண்டும் நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-11-03 06:45 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள அரசு கல்லூரியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. அப்போது இரு பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் வாக்குச்சீட்டுகளை கிழித்து வீசியதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

இந்த மோதலில் பலத்த காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோதல் காரணமாக இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், சில நாட்களுக்குப் பின் வாக்குப்பதிவு மீண்டும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

Full View

   

Tags:    

மேலும் செய்திகள்