ஓட்டல்களில் காபி-டீ விலை உயர்வு

பால்விலை அதிகரிப்பால் ஓட்டல்களில் காபி-டீ விலை உயர்ந்துள்ளது.

Update: 2022-11-26 21:20 GMT

பெங்களூரு-

கர்நாடகத்தில் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து பால் கூட்டமைப்புகள் உத்தரவிட்டது. இதையடுத்து, மாநிலத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் காபி மற்றும் டீ விலையை ரூ.2 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாதாரண ஓட்டல்களில் பால் விலை உயர்ந்திருந்தாலும், காபி மற்றும் டீ விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் கடந்த ஏப்ரல் மாதம் தான் சிறிய கடைகளில் ரூ.8-க்கு விற்கப்பட்ட காபி, டீ விலை ரூ.10 ஆக உயர்த்தப்பட்டு இருந்தது. தற்போதும் சிறிய கடைகளில் ரூ.10-க்கு காபி மற்றும் டீ விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் பெரிய ஓட்டல்களில் மட்டும் ரூ.20-க்கு விற்கப்பட்ட காபி மற்றும் டீ விலை ரூ.22 ஆக உயர்த்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.சி.ராவ் நிருபர்களிடம் கூறுகையில், பால் விலை மாநிலத்தில் ரூ.2 உயர்த்தப்பட்டு இருந்தாலும், ஓட்டல்களில் காபி, டீ விலையை உயர்த்த கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. சில ஓட்டல்களில் மட்டும் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதமே பால் விலை, கியாஸ் விலை உயர்வை காரணம் காட்டி உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தற்போது விலை உயர்வு செய்ய வேண்டாம் என்று ஓட்டல் உரிமையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்