நிலக்கரி உற்பத்தி கடந்த ஆண்டை விட 17% அதிகரிப்பு - மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தகவல்

நடப்பாண்டில் நவம்பர் வரை 524.2 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-14 13:39 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் நடப்பாண்டில் 17% அதிகமாக நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு இல்லை எனவும் மத்திய நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், 2020-21ம் ஆண்டுகளில் 716.083 மில்லியன் டன் அளவிற்கும், 2021-22ம் ஆண்டுகளில் 778.19 மில்லியன் டன் அளவிற்கும் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் நவம்பர் வரை 524.2 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 448.1 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர், இது கடந்த ஆண்டை விட 17% அதிகம் என்றும் தெரிவித்தார்.

மேலும் நாட்டில் உள்ள நிலக்கரி தொடர்பான மின் நிலையங்களில் 31 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளதால், தற்போது நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்