குறைந்த விலைக்கு மெத்தை, தலையணை தருவதாக கூறி வியாபாரிகளிடம் ரூ.4¾ லட்சம் மோசடி
குறைந்த விலைக்கு மெத்தை, தலையணை தருவதாக கூறி வியாபாரிகளிடம் ரூ.4¾ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு;
தாவணகெரே டவுன் அலையப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் இப்ராஹிம், ரபீக். இவர்கள் 2 பேரும் சோ்ந்து அந்தப்பகுதியில் ெமத்தை விற்பனை கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் கடைக்கு அதேப்பகுதியை சேர்ந்த துர்கப்பா மற்றும் கணேசன் ஆகிய இருவரும் வந்துள்ளனர்.
இவர்கள் கடையின் உாிமையாளர்கள் இப்ராஹிம், ரபீக்கிடம் தங்களிடம் குறைந்த விலைக்கு தரமான மெத்தைகளும், தலையணைகளும் உள்ளது. அதனை வாங்கி விற்பனை செய்யும் படி கூறியுள்ளனர். இதனை நம்பிய இருவரும், துர்கப்பா மற்றும் கணேசனிடம் மெத்தை, தலையணைகளுக்கு முன்பணமாக ரூ.4.80 லட்சத்தை கொடுத்துள்ளனர்.
ஆனால் பல நாட்கள் ஆகியும் ெபாருட்களை அவர்கள் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து இப்ராஹிம், அவர்களிடம் கேட்டபோது அவர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த இப்ராஹிம், ரபீக் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறும் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் பணத்தையும் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர்கள் ஆர்.எம்.எஸ். போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் துர்கப்பா, கணேசனை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.