மேற்கு பிராந்திய கடற்படை தலைமையகத்தில் முப்படை தளபதி ஆய்வு

மேற்கு பிராந்திய கடற்படை தலைமையகத்தில் முப்படை தளபதி அனில் சவுகான் ஆய்வு நடத்தினார்.

Update: 2023-04-15 23:19 GMT

Image Courtacy: ANI

மும்பை,

இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் மும்பையில் உள்ள மேற்கு பிராந்திய கடற்படை தலைமையகத்துக்கு சென்றார். அங்கு அவர் படைகளின் செயல்பாட்டு தயார் நிலை குறித்து ஆய்வு செய்தார்.

கடற்படை துணை தளபதி தினேஷ் கே.திரிபாதி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதுடன், படை வீரர்களுடன் கலந்துரையாடலும் நடத்தினார். மேலும் படைகளின் கூட்டுப்பணி, ஒருங்கிணைப்பு, தற்சார்பு நிலையின் முக்கிய பங்கு குறித்தும் அவர் விவாதித்தார்.

இந்த ஆய்வின் போது, மேற்கு பிராந்தியத்தின் பங்கு, பொறுப்புகள் மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் மேற்குக் கடற்பரப்பைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடற்படையின் ஐ.என்.எஸ். மோர்முகாவ் போர்க்கப்பல், ஐ.என்.எஸ். வேலா நீர்முழ்கி கப்பல் ஆகியவற்றையும் அனில் சவுகான் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்