முதல்-மந்திரி சித்தராமையா இன்று மைசூரு வருகை
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மைசூருவுக்கு வர உள்ளார்.
ைமசூரு:
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மைசூருவுக்கு வர உள்ளார்.
சித்தராமையா இன்று வருகை
முதல்-மந்திரி சித்தராமையா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மைசூருவுக்கு வருகிறார். அவர் மைசூருவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இன்று காலை 8 மணி அளவில் கார் மூலம் மைசூருவுக்கு வரும் சித்தராமையா, இரவு மைசூரு போலீஸ் குடியிருப்பு திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் அன்றைய தினம் இரவு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
மறுநாள், அதாவது நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணி அளவில் மாவட்ட பஞ்சாயத்து சபை கூட்ட அரங்கில் கர்நாடக மாநில வளர்ச்சி பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதேநாள் மாலை 5 மணி அளவில் மைசூரு சித்தார்த்த நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள கண் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார். இரவு 7 மணி அளவில் மானசகங்கோத்ரியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறார்.
கிரகலட்சுமி திட்டம்
பின்னர் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நஞ்சன்கூடு செல்லும் சித்தராமையா, கபிலா ஆற்றங்கரையோரம் இருக்கும் சித்தூர் மடத்துக்கு சென்று அங்கு நடக்கும் விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் மதியம் 1 மணி அளவில் மைசூரு கடகோளா கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலும், மதியம் 2 மணிக்கு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
அன்றைய தினம் மைசூருவில் தங்கும் சித்தராமையா, மறுநாள் அதாவது 30-ந்தேதி காலை 11 மணி அளவில் மைசூரு மகாராஜா கல்லூரி வளாகத்தில் நடக்கும் கிரகலட்சுமி திட்ட தொடக்கவிழாவில் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். பின்னா் நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்-மந்திரி சித்தராமையா மாலை 5.30 மணி அளவில் சாலை மார்க்கமாக பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.