உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், திரிவேணி சங்கமம் கும்பமேளாவில் கலந்து கொள்கிறார்

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், திரிவேணி சங்கமம் கும்பமேளாவில் கலந்து கொள்கிறார் என்று மந்திரி நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-15 18:45 GMT

மண்டியா;

மண்டியா மாவட்டம் கே.ஆர் பேட்டை தாலுகா லட்சுமண தீர்த்தா-ஹேமாவதி-காவிரி ஆகிய மூன்று நதிகள் இணையும் திரிவேணி சங்கம் உள்ளது. இங்கு வருகிற அக்டோபர் 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மகா கும்பமேளா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அக்டோபர் 16-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ள இருக்கிறார். இதுகுறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி நாராயணகவுடா கூறியதாவது:- மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டையில் நடைபெறும் திரிவேணி சங்கம கும்பமேளாவில் உத்தர பிரசேத முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவரை லக்னோவில் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளோம். நிச்சயம் கலந்து கொள்வதாக கூறினார். அப்போது அவர் கர்நாடகத்திற்கும், உத்தர பிரதேசத்திற்கும் உரிய கோரங்கநாதேஷ்வரர் உறவை பற்றி நினைவு கூர்ந்தார். மேலும் பரசுராமர், காலபைரேஸ்வரர், தர்மஸ்தலா, ஆதிசுஞ்சனகிரி ஆகிய கோவில்கள் வரலாறு மற்றும் கர்நாடக அரசின் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து பேசினார். அவரது வருகையை அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்