முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள்: ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Update: 2024-03-01 03:31 GMT

புதுடெல்லி ,

தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை  கொண்டாடுகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளோடு, உடல் நலத்தோடு வாழ வாழ்த்துகள்  என தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஜனாதிபதி திரவுபதி முர்முவும் முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி  உள்பட கூட்டணி கட்சித்தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளனர். 


Tags:    

மேலும் செய்திகள்