காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டி ரூ.1¼ லட்சம் பறிப்பு

காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டி ரூ.1¼ லட்சம் பறித்த முகநூல் மூலம் பழகிய பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-08-16 16:12 GMT

சிக்கமகளூரு, ஆக.17-

காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டி ரூ.1¼ லட்சம் பறித்த முகநூல் மூலம் பழகிய பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காதலனுடன் உல்லாசம்

தாவணகெரே வித்யாநகரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கும் சிவராஜ் (வயது 29), சிக்கமகளூருவை சேர்ந்த சுரேஷ்குமார் (26), ஹாசனை சேர்ந்த ரம்யா (26), துமகூருவை சேர்ந்த பவித்ரா (26) ஆகியோருக்கும் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இளம்பெண், தனது காதலன் மற்றும் முகநூல் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார்.

அப்போது தங்கும் விடுதியில் இளம்பெண் தனது காதலனுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனை அவரது முகநூல் நண்பர்கள் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

ரூ.1.20 லட்சம் பறிப்பு

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் 4 பேரும், இளம்பெண்ணை ெதாடர்பு கொண்டு, காதலனுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ தங்களிடம் இருப்பதாகவும், அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க தங்களுக்கு ரூ.15 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். இதனை கேட்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறிய இளம்பெண், அவர்களுக்கு ரூ.1.20 லட்சம் கொடுத்தார். அதன்பிறகும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

4 பேர் கைது

இந்த நிலையில் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண், நடந்த சம்பவங்களை கூறி வித்யாநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகநூல் மூலம் பழகிய ரம்யா, பவித்ரா, சுரேஷ்குமார், சிவராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் 4 பேரும் கன்னட ரக்‌ஷண வேதிகே அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்