மெத்தைகள் ஏன் இவ்வளவு அழுக்காக இருக்கிறது...? மருத்துவமனை துணைவேந்தரை படுக்கையில் படுக்க வைத்த மந்திரி

பாபா பரீத் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை மருத்துவமனை படுக்கையில் படுக்கச் சொல்லி மந்திரி அவமரியாதை செய்துள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2022-07-30 07:07 GMT

மும்பை

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல் மந்திரியாக பகவந்த் மான் இருந்து வருகிறார். சமீபத்தில் சுகாதாரத் துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஜுரமஜ்ரா,சண்டிகர் ரீத் கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மருத்துவமனை படுக்கைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதைக்கண்டு கோபமடைந்த மந்திரி , ஏன் மெத்தைகள் இவ்வளவு அழுக்காக இருக்கிறது என கேள்வி எழுப்பியதுடன், பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராஜ்பகதூரை அழைத்து இதான் நீங்கள் மருத்துவமனையை நிர்வகிக்கும் லட்சணமா? இதில் நோயாளிகள் எப்படி படுப்பார்கள், இதுபோன்ற படுக்கைகளில் நீங்கள் படுப்பீர்களா என சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன்துணைவேந்தரை அந்த படுக்கையில் படுக்குமாறு கூறினார்.

அதனையடுத்து துணைவேந்தர் டாக்டர் ராஜ்பகதூர் அந்த மெத்தையில் படுத்து காண்பித்தார், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மந்திரியின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுகாதாரத்துறை அமைச்சரின் செயலை கண்டித்துள்ளதுடன், ஆம் ஆத்மி இது போன்ற நாடகங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 



Tags:    

மேலும் செய்திகள்