பெங்களூரு மாநகராட்சியில் 4 வார்டுகளுக்கான இடஒதுக்கீடு மாற்றம்; கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு மாநகராட்சியில் 4 வார்டுகளுக்கான இடஒதுக்கீடு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-11 21:12 GMT

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதையடுத்து, மாநகராட்சியின் வார்டுகள் 198-ல் இருந்து 243-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 243 வார்டுகளுக்கும் புதிய இடஒதுக்கீட்டை கர்நாடக அரசு வெளியிட்டு இருந்தது. இந்த இடஒதுக்கீடு பட்டியலுக்கு காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோர்ட்டிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், 243 வார்டுகளுக்கான இடஒதுக்கீட்டில் 4 வார்டுகளுக்கான இடஒதுக்கீடு மட்டும் மாற்றி கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது ஈஜிபுரா, பசவனபுரா, நெலகதரனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி ஆகிய 4 வார்டுகளுக்கான இடஒதுக்கீடு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பசவனபுரா வார்டு எஸ்.சி. பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது அது பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஈஜிபுரா வார்டு முதலில் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது, அது தற்போது எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோல், நெலகதரனஹள்ளி வார்டு தற்போது எஸ்.டி. பெண் பிரிவினருக்கும், காடுகொண்டனஹள்ளி வார்டு பொதுப்பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்