தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும்
இதனால் ,தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.