சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் பெயர்..! பெயர் மாற்றம் உடனடியாக அமல்

'ஷாஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம், சண்டிகர்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-06 10:28 GMT

சண்டிகர்,

சுதந்திரப் போராட்ட தியாகி பகத் சிங்கின் 115வது பிறந்தநாள் செப்டம்பர் 28ம் தேதி கொண்டாடப்பட்டது. அதே நாளில், சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் நினைவாக சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என செப்டம்பர் 25ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக கடந்த வாரம், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "சண்டிகரில் உள்ள சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திற்கு 'ஷாஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம், சண்டிகர்' என்று சூட்டப்பட்டது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களின் பெயர் மற்றும் மறுபெயரிடுவதில் விரிவான செயல்முறை பின்பற்றப்படுகிறது. அதற்கான இறுதி ஒப்புதல் மத்திய அமைச்சரவையில் இருந்து வர வேண்டும். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சண்டிகர் விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்