கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொடர்ந்து கட்டுக்குள் இருந்தாலும், கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் வேகம் எடுத்து வருகிறது.
இந்தநிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார்.