இமாம் அமைப்பு தலைவர் உமர் அகமதுவுக்கு மத்திய அரசின் ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை புகழந்த இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாஸிக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2022-10-13 09:32 GMT

புதுடெல்லி,

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை புகழந்த இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாஸிக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அண்மைக்காலமாக இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பலரை சந்தித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் செப்டம்பர் 22 ஆம் தேதி டெல்லியில் உள்ள மசூதியில் அகில இந்திய இமாம் அமைப்பின் தலைவர் உமர் அகமது இலியாஸியை மோகன் பகவத் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து மோகன் பகவத்தை தேசத்தின் தந்தை எனவும் அவர் வருகையில் இருந்து ஒரு நல்ல செய்தி வெளிப்படும் என அகமது இலியாஸி கூறினார். மேலும், இந்தியாவில் இந்து முஸ்லீம் கடவுளை வழிபடும் முறைகள் வேறு ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று என பேட்டி அளித்தார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை தேசத் தந்தை என இமாம் அமைப்பின் தலைவர் அழைத்ததால் அவருக்கு அண்மைக்காலமாக பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு ஒய்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்