இந்தியாவில் மேலும் 5 இடங்களை சர்வதேச சதுப்பு நிலங்களாக மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் பள்ளிக்கரனை, பிச்சாவரம் உள்ளிட்ட 3 இடங்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

Update: 2022-07-26 19:02 GMT

புதுடெல்லி,

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் அங்கீகார பட்டியலில் மேலும் 5 இந்திய சதுப்பு நிலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள கரிக்கிளி பறவைகள் சரணாலயம், பள்ளிக்கரனை சதுப்பு நிலக்காடு, பிச்சாவரம் சதுப்ப நிலக்காடு ஆகியவை உட்பட மொத்தம் 5 இடங்கள், ராம்சர் சர்வதேச அங்கீகார பட்டியலில் இந்தியா சார்பில் இடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேபோல் மிசோரமில் பாலா சதுப்பு நிலம், மத்தியப்பிரதேசத்தில் சாக்கிய சாகர் சதுப் புநிலம் ஆகிய இரண்டு பகுதிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் ராம்சர் அங்கீகார பட்டியலில் இடம் பெற்றுள்ள பாதுகாக்கப்பட்ட சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை 49-லிருந்து 54-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பிரதமர்நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள முன்முயற்சி சதுப்பு நிலங்களை இந்தியா எவ்வாறு பராமரித்து முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என தெரிவித்துள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்