திருப்பதி ஏழுமலையான் கோவில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டை 'பிளாக்'கில் விற்ற 5 பேர் மீது வழக்கு

திருப்பதி ஏழுமலையான் கோவில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டை 'பிளாக்'கில் விற்ற 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-08-13 08:16 GMT

திருப்பதி,



திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வந்த புகாரை தொடர்ந்து அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். இதில், திருப்பதி கோவில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் 'பிளாக்'கில் விற்கப்படுவது தெரிய வந்தது.

இதுபற்றி நடந்த விசாரணையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சூப்பிரெண்டு அந்தஸ்தில் உள்ள மல்லிகார்ஜுன் என்பவர், விஜயவாடாவை சேர்ந்த வம்சி மற்றும் முரளிகிருஷ்ணா மற்றும் 2 பெண்கள் இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதுவரை, அவர்கள் 721 ஸ்ரீவாரி டிக்கெட்டுகளை விற்றுள்ளனர். இதுதவிர, குளிரூட்டப்பட்ட அறைகளுக்கு கூடுதல் கட்டணமும் வசூலித்து உள்ளனர்.

அவர்கள் மீது கண்காணிப்பு அதிகாரிகள் போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதனை தொடர்ந்து நகர போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்