கேரளாவில் அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3 ஆயிரம் பேர் மீது வழக்கு

கேரளாவில் அதானி குழுமம் கடற்கரை துறைமுகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-28 11:00 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் அதானி குழுமம் கடற்கரை துறைமுகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கடந்த சனிக்கிழமை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், விழிஞ்சம் காவல்நிலையத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். பெண்கள் உட்பட 3000 பேர் காவல் நிலையத்தை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து சொத்துக்களையும் சூறையாடியாதாக கூறப்படுகிறது. இந்த வன்முறையில் 36 போலீசார் படுகாயமடைந்தனர்.

இந்த வன்முறையை தடுக்கும் வகையில், போலீசாரும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதில், 30 பேர் காயமடைந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், சம்பவ இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், போலீசாரை தாக்கியதாக 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், கலகத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்