கார்- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி

அஜ்ஜாம்புரா அருகே கார்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-10-02 18:45 GMT

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா அந்தரகட்டே கிராமத்தை சோ்ந்தவர்கள் ஹர்ஷா மற்றும் சண்முகா. தொழிலாளிகளான இவர்கள் இருவரும் அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதே சாலையில் எதிரே கார் வந்து கொண்டிருந்ததது. இந்த நிைலயில் திடீரென மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு அஜ்ஜாம்புராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஹர்ஷா நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்