பொது இடத்தில் கஞ்சா புகைத்த 15 பேர் சிக்கினர்

பொது இடத்தில் கஞ்சா புகைத்த 15 பேர் சிக்கினர்

Update: 2022-10-18 18:45 GMT

சிவமொக்கா: கர்நாடக மாநிலம் சிவமொக்கா நகரில் பொது இடத்தில் சிலர் கஞ்சா புகைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக தகவல் கிடைத்தது. அதன்படி தொட்டபேட்டை, கோட்டை பகுதிகளில் கஞ்சா புகைத்து சுற்றித்திரிந்ததாக மொத்தம் 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களை, போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதில் அவர்கள் அனைவரும் கஞ்சா புகைத்திருந்தது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மீது தொட்டபேட்டை, கோட்ைட போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்