கர்நாடகாவில் நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது...!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது.

Update: 2023-05-07 10:53 GMT

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. இதனால் இரு கட்சி தலைவர்களும் அங்கு தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. இதனால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று 2 மெகா ரோடு ஷோ நடத்தினார். 2½ மணி நேரத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பேரணியாக சென்றார். 13 தொகுதி மக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் இன்று 2-வது நாளாக ரோடு ஷோவில் ஈடுபட்டார்.

திப்சந்தரை சாலையில் உள்ள கெம்போகவுடா சாலையில் இருந்து அவர் ரோடு ஷோவை தொடங்கினார். வழி நெடுகிலும் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. ½ மணி நேரத்தில் அவர் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாக்கு சேகரித்தார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பெல்காலி தெற்கு சட்டசபை தொகுதியில் ரோடு ஷோவில் ஈடுபட்டார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கர்நாடகாவில் இன்று தீவிர பிரசாரம் செய்தார்.

முல்பி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்