ரெயில்முன் பாய்ந்து பி.யூ. கல்லூரி மாணவர் தற்கொலை

சிவமொக்காவில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ஓடும் ரெயில்முன் பாய்ந்து பி.யூ. கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-20 20:45 GMT

சிவமொக்கா:

பி.யூ. கல்லூரி மாணவர்

சிவமொக்கா (மாவட்டம்) டவுன் ஒசமனே பகுதியில் 6-வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் விஸ்வாஷ்(வயது 17). இவர் சிவமொக்கா டவுனில் உள்ள ஒரு பி.யூ. கல்லூரியில் படித்து வந்தார். இவரது பெற்றோர் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரியில் நடந்த தேர்வில் விஸ்வாஷ் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வருத்தத்தில் இருந்த அவருக்கு அவருடைய பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் இதுதான் எனது கடைசி இரவு என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

தற்கொலை

அதைப்பார்த்த அவரது நண்பர்கள் பலரும் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர் செல்போன் அழைப்புகளை எடுத்து பேசவில்லை. இந்த நிலையில் அவர் சிவமொக்கா-தாளகொப்பா இடையே ரெயில்வே மேம்பால பகுதியில் பிணமாகி கிடந்தார். அவர், ஓடும் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்