ஒடிசா கடற்கரையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மணல் சிற்பம் உருவாக்கி வாழ்த்து

இங்கிலாந்து பிரதமாராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Update: 2022-10-25 15:28 GMT

ஒடிசா:

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் வெறும் 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கின. தற்போது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரே பிரதமர் பொறுப்பேற்க முடியும் என்ற நிலை இருந்தது.

அந்த வகையில் இங்கிலாந்தின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக் போட்டியின்றி தேர்வு ஆனார். இதையடுத்து இங்கிலாந்தில் புதிய ஆட்சியை அமைக்குமாறு ரிஷி சுனக்கிற்கு இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சர்லஸ் இன்று அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், அரசர் மூன்றாம் சார்லசை இன்று சந்தித்து பேசினார். அப்போது, அரசர் 3-ம் சார்லஸ், முறைப்படி புதிய பிரதமராக சுனக்கை அறிவித்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமாராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 42 வயதான ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை வாழ்த்தும் வகையில், ஓடிசாவின் பூரி கடற்கரையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பிரமாண்டமான மணற் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது டுவிட்டர் பதிவில் புகைபடத்தை பகிர்ந்து மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்