குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம்: ராகுல் காந்தி
குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.
புதுடெல்லி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் மூத்த குடிமக்களை பிறரை சார்ந்து இருக்கும் நிலைக்கு பாஜக அரசு தள்ளுவதாக குற்றம் சாட்டியுள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்றார். குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் குஜராத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இவர்களுக்கு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ராகுல் காந்தி இன்று தனது டுவிட் பதிவில், " காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றார். மேலும், ராஜஸ்தான், சத்தீஷ்கரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதாகவும் குஜராரத்தில் அமையும் காங்கிரஸ் அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரும்" எனப்பதிவிட்டார்.