திருமண விருந்தில் குலாப் ஜாமூன் தட்டுப்பாடு: மோதலில் ஒருவர் கொலை

குலாப் ஜாமூன் தட்டுப்பாடு காரணமாக மணமகன் வீட்டாருக்கும் மணமகள் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2022-10-27 12:11 GMT

ஆக்ரா

ஆக்ராவில் மொகல்லா ஷைக்கானில் வசிக்கும் உஸ்மான் என்பவரின் மகள் திருமணம் நடைபெற்றது. இதில் விருந்தில் குலாப் ஜாமூன் தட்டுப்பாடு காரணமாக மணமகன் வீட்டாருக்கும் மணமகள் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் அதுமோதலாக மாறியது இதில் ஒரு நபர் கொலை செய்ய்பட்டார்.

இது குறித்து எட்மத்பூர் வட்ட அதிகாரி ரவி குமார் குப்தா கூறியதாவது;-

குலாப் ஜாமூன் தட்டுப்பாடு குறித்த வாக்குவாதம் கடுமையான சண்டையாக மாறியது, மேலும் ஒரு நபர் கலந்து கொண்டவர்களை கத்தியால் சரமாறியாக தாக்கினார்.

தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சன்னி (22) என்பவர் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

தாக்குதலில் காயமடைந்த மேலும் 5 பேர் எட்மத்பூரில் உள்ள சமூக சுகாதார மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்