பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை முயற்சி வெற்றி - இந்திய கடற்படை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டது
கடற்பரப்பில் இந்திய கடற்படையின் ஆயுத பலத்தை பறைசாற்றும் வகையில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். மார்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக சென்று தாக்கியதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடற்பரப்பில் இந்திய கடற்படையின் ஆயுத பலத்தை பறைசாற்றும் வகையில் இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆயுத சோதனையானது தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு அடையாளம் என்றும், இந்திய கடற்படையின் பலத்திற்க்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் கடற்படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.