பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-16 21:19 GMT

தேவனஹள்ளி:-

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு விமான நிலையத்திற்கு டுவிட்டர் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டுவிட்டரில் மர்மநபர் ஒருவர் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் பெங்களூரு விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன். அப்போது தான் பெங்களூரு அருகே புதிதாக மற்றொரு விமான நிலையம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதுபற்றி விமான நிலைய போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் டுவிட்டரில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை தேடி வருகின்றனர். மேலும், அதுதொடர்பாக தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் விமான நிலையம் உள்ளது. இதனால் விமான பயணிகள் பெங்களூருவில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு நீண்ட நேரம் ஆவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பயணிகள் பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்