ரிசர்வ் வங்கிக்கு மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்..!

மத்திய நிதி மந்திரி பதவி விலக வேண்டும் என மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-12-26 15:06 GMT

Image Courtesy : ANI

மும்பை,

மும்பையில் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, அந்த மின்னஞ்சலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் பதவி விலக வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேலும் சில தனியார் வங்கிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மொத்தம் மும்பையில் உள்ள 11 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்