மத்தியப்பிரதேசம்: மரத்தில் தூக்கிட்டு 3 சகோதரிகள் தற்கொலை - போலீசார் விசாரணை

மத்திய பிரதேசம் காண்ட்வா மாவட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சகோதரிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2022-07-27 09:56 GMT
கோப்புப்படம்

காண்ட்வா,

மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சகோதரிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜாவர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்கேடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் சோனு, சாவித்திரி மற்றும் லலிதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் தங்கள் தாய் மற்றும் சகோதருடன் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மூவரும் மரத்தில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக் கடிதம் எதுவும் கிடைக்காததால் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்