டெல்லி: பாஜக விவசாய அணி நிர்வாகி சுட்டுக்கொலை

டெல்லியில் பாஜக விவசாய அணி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-04-14 19:24 GMT

டெல்லி,

டெல்லி பாஜக விவசாய அணி நிர்வாகி சுரேந்திர மதிலா (வயது 60). இவர் நேற்று மாலை பிண்டாபூர் நகரில் அவரது அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 2 பேர் அலுவலகத்தில் இருந்த சுரேந்திர மதிலாவை துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த சுரேந்திர மதிலா அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேந்திராவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்