கர்நாடகத்தில் பா.ஜனதா தொண்டர்களுக்கே பாதுகாப்பு இல்லை- காங்.செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி பேட்டி
கர்நாடகத்தில் பா.ஜனதா தொண்டர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்று காங்.செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு உள்ளது. ஆனால் பா.ஜனதா தொண்டர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்கள் கொல்லப்பட்டபோது, பா.ஜனதா கட்சியினர் தீவிரமாக போராட்டம் நடத்தி வாக்கு வங்கியை அதிகரித்து கொண்டனர்.
ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சியில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பா.ஜனதா மவுனமாக உள்ளது. பிரவீன் நெட்டார் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்.
இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.