நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் சி.டி.ரவி பேட்டி

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என முன்னாள் மந்திரி சி.டி.ரவி கூறினார்.

Update: 2023-09-08 18:45 GMT

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் முன்னாள் மந்திரி சி.டி.ரவி ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில், கர்நாடகாவில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

குறிப்பாக 20 இடங்களுக்கு மேல் கர்நாடகத்தில் வெற்றி அடைய வேண்டும். மக்களை வீடு வீடாக சென்று பா.ஜனதா தொண்டர்கள் பார்க்க வேண்டும். அப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை அவர்களிடம் எடுத்து கூற வேண்டும்.

மேலும் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்- ஒழுங்கு பிரச்சினை குறித்தும் பேச வேண்டும்.

பா.ஜனதாவில் கட்சிக்குள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி எப்போதும் மக்கள் பிரச்சினை குறித்து பேசாது. காங்கிரசில் உட்கட்சி பூசல் உள்ளது. அதனை அவர்கள் சரிசெய்யட்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்