சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும்; பசவராஜ் பொம்மை நம்பிக்கை

சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-11 21:30 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாங்கள் இன்று (நேற்று) முதல் 'ஜனசங்கல்ப' சுற்றுப்பயணத்தை தொடங்குகிறோம். எங்கள் அரசின் திட்டங்கள் மீது மக்களிடம் ஒரு விதமான ஆர்வம் உள்ளது. இந்த பயணம் மூலம் மக்களின் ஆதரவை பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும். இந்த பயணத்தின்போது மத்திய-மாநில அரசுகளின் திட்ட பயனாளிகளிடம் கலந்துரையாடுவோம். ராகுல் காந்தியின் பாதயாத்திரை பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஒற்றுமை யாத்திரை நடத்துகிறார்கள். நாட்டை பிரித்தது யார் என்பது உலகத்திற்கு தெரியும். அதனால் நாங்கள் அவர்களின் பாதயாத்திரை பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் எங்களின் திட்டங்களை மக்களுக்கு தெரிவித்து அவர்களின் ஆதரவை பெறுவோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்