கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை நம்பிக்கை
கர்நாடகாவில் உள்ள தமிழ் மக்கள் பாஜகவை ஆதரிக்க தயாராக உள்ளனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
கர்நாடகாவில் மீண்டும் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். கர்நாடகாவில் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்காக 224 தொகுதிகளிலும் நாங்கள் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். 1 வேட்பாளர் 2 வேட்பாளர்களை நிறுத்தி உள்ளவர்கள் பற்றி இங்கு பேசுவது நன்றாக இருக்காது. கர்நாடகாவில் உள்ள தமிழ் மக்கள் பாஜகவை ஆதரிக்க தயாராக உள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் பாஜகவை நமக்கான கட்சி என நினைக்கின்றனர். வகுப்பறைகளில் ஹிஜாப் மட்டுமல்ல, காவி உடையும் வேண்டாம் என்கிறோம் என்றார்.