ராஜஸ்தானில் பாஜக மேற்கொள்ளவிருந்த ஜன் ஆக்ரோஷ் பாத யாத்திரை ரத்து
ராஜஸ்தானில் பாஜக மேற்கொள்ளவிருந்த ஜன் ஆக்ரோஷ் பாத யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் பாஜக மேற்கொள்ளவிருந்த 'ஜன் ஆக்ரோஷ் யாத்திரை' ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் நலனை கருத்தில்கொண்டு 'ஜன் ஆக்ரோஷ் யாத்திரை' நிறுத்தி வைக்கப்படுவதாக ராஜஸ்தான் மாநில பாஜக பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் அறிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி அருண் சிங் கூறுகையில், ராஜஸ்தானில் நடைபெறவிருந்த எங்களது 'ஜன் ஆக்ரோஷ் யாத்திரை' நிறுத்தி உள்ளோம். காங்கிரஸ் ராகுல் காந்தி கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது எனவும் கூறியுள்ளார்.