தேசியக்கொடியை பாஜக ஒருபோதும் மதித்ததில்லை - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
தேசியக்கொடியை பாஜக ஒருபோதும் மதித்ததில்லை என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
லக்னோ,
நாட்டின் சுதந்திரதினத்தையொட்டி உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 'ஹர் ஹர் திரங்கா' என்ற பெயரில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 11 முதல் 17 வரை சுதந்திர வாரமாக கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இந்த அறிவிப்பை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். இது தொடப்ராக அவர் கூறுகையில், ஆகஸ்ட் 9 முதல் 15- ம் தேதி வரை மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றவேண்டும். தேசியக்கொடியை பாஜக ஒருபோதும் மதித்ததில்லை. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு இல்லாதவர்கள் தேசபக்தி என்ற பெயரில் வேலை செய்கின்றனர்' என்றார்.