பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை கர்நாடகா பயணம்

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கர்நாடகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

Update: 2023-04-23 09:55 GMT

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கர்நாடகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக நாளை அவர் கர்நாடகத்திற்கு செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள சிட்லகட்டா, சிக்காபல்லபுரா, உத்தர கன்னடா உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஜே.பி.நட்டா பிரச்சாரம் செய்ய உள்ளார். இதனைடையே மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கர்நாடக்த்திற்கு சென்றுள்ளார். அதே போல் ராகுல் காந்தியும் 2 நாள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்