விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய பா.ஜனதா எம்.எல்.ஏ

விபத்தில் சிக்கியவர்களுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. உதவினார்.

Update: 2022-10-21 18:45 GMT

உப்பள்ளி:  தார்வார் மாவட்டம் கல்கட்டகி அருகே தடஸ் கிராஸ் சாலையில் நேற்றுமுன்தினம் 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிகொண்டன. இதில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேர் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். அப்போது அந்த வழியாக காரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சி.எம்.நிம்பன்னவர் வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் விபத்தை பார்த்த அவர் உடனே காரை நிறுத்தியுள்ளார். பின்னர் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு தனது காரில் ஏற்றிகொண்டு கல்கட்டகி தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.வின் செயலை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் இதுகுறித்து கல்கட்டகி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்