சித்தராமையா பிறந்தநாள் விழாவால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு இல்லை; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கருத்து

சித்தராமையா பிறந்தநாள் விழாவால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு இல்லை என முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.

Update: 2022-08-02 15:05 GMT

சிவமொக்கா;


காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையாவின் பிறந்தநாள் விழா இன்று (புதன்கிழமை) தாவணகெரேயில் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஈசுவரப்பா கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

சித்தராமையாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன். அவர் தொடர்ந்து அரசியல் வாழ்க்கையில் பயணிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் கடந்த சில தினங்களாக உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்க்கும்போது, பெண்ணும் பார்க்கவில்லை, திருமணமும் நடக்கவில்லை. ஆனால் குழந்தைக்கு நான் தான் தகப்பன் என்பது போல் உள்ளது. காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்படும் சித்தராமையா பிறந்தநாள் விழாவால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்