பா.ஜனதா நம்பிக்கை தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது

வெற்று வாக்குறுதிகளை வழங்கவில்லை, பா.ஜனதா நம்பிக்கை தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

Update: 2023-03-27 22:11 GMT

சிக்பள்ளாப்பூர்:-

சிக்பள்ளாப்பூர் அருகே அரூர் கிராமத்தில் நந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாநில சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்துகொண்டு, அந்த ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. இந்த இரட்டை என்ஜின் அரசால் மாநிலத்தில் அனைத்து துறைகளும் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும் இந்த இரட்டை என்ஜின் அரசால் கர்நாடகம் பெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி கட்ட மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்கியுள்ளது. 57 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கல்லூரி விசாலமான அறைகள், விடுதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சிக்பள்ளாப்பூரில் சாய் மருத்துவ கல்லூரியும் பிரதமர் மோடி திறந்துவைத்தார். சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 2 மருத்துவ கல்லூரிகள் இருப்பது நமக்கு பெருமை. பா.ஜனதா கட்சி எப்போதும் வெற்று வாக்குறுதிகளை அளித்தது இல்லை. பா.ஜனதா மக்களுக்கு நம்பிக்கை தரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்